புதுவை கால்நடை இயக்குநர் மீது குவியும் பாலியல் புகார்கள் ‘உன்னையும் பிடிச்சுடுறேன்... பாம்பையும் பிடிச்சுடுறேன்': பெண் ஊழியரிடம் அதிகாரி பேசிய ஆபாச உரையாடல்

புதுச்சேரி: புதுவை கால்நடைத்துறை இயக்குநர் மீது பணிபுரியும் பெண்களிடமிருந்து பாலியல் புகார்கள் குவிந்து வருகிறது. அதிர்ச்சியடைந்த மாதர் சங்கத்தினர் நேற்று  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுவை கால்நடைத்துறை இயக்குநர் பத்மநாபன் மீது அத்துறையில் பணியாற்றும் சில பெண்கள் பாலியல் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் தரப்பில் எழுத்துப்பூர்வமாக கவர்னர் கிரண்பேடிக்கு புகார் மனு அளித்துள்ளனர்.  அதன்பேரில் டாக்டர் வித்யா ராம்குமார் தலைமையிலானகுழுவினர் பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரித்து சாட்சியம் பெற்றனர். மொத்தம் 27 பெண்களிடமிருந்து உயர் அதிகாரிகள் மீது பாலியலவ் தொல்லை தொடர்பான புகார்களை அந்த பெண்கள் அளித்த நிலையில் அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்தனர். முதற்கட்டமாக கால்நடைத்துறை இயக்குநர் பத்மநாபன், குழுவிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் நேற்று முன்தினம் குழு முன்பு நேரில் ஆஜராகவில்லை. முன்னதாக இந்த விசாரணைக்கு நீதிமன்றத்தை அணுகி அவர் தடை உத்தரவு பெற்றார்.

 இதனால் அவருக்கு மேலும் காலஅவகாசம் தரலாம் என்று கருதிய குழு, அவர் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது. அவரது பேச்சு அடங்கிய பாலியல் துன்புறுத்தல் ரீதியான ஆடியோ பதிவுகளும் சாட்சியங்களாக பெறப்பட்டுள்ளன. அதில், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஒரு பெண் ஊழியர், குடியிருப்பு பகுதியில் பாம்பு புகுந்தது தொடர்பாக முறையிட்டபோது, பாம்பையும் பிடிக்கிறேன்... உன்னையும் பிடிக்கிறேன்... என்று ஆபாசமாக பேசிய ஆடியோ பதிவாகி உள்ளது. இது வாட்ஸ்அப்பிலும், சமூக வலைதளங்களிலும் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனிடையே புதுச்சேரி கால்நடைத்துறை இயக்குநர் அலுவலகம் முன்பு நேற்று மாதர் சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

் பெண் ஊழியரிடம் அதன் இயக்குநர் பத்மநாபன் ஆபாசமாக பேசிய ஆடியோ விபரம் :

பெண் ஊழியர்: ஹலோ, குட்ஆப்டர்நூன் சார்.

அதிகாரி: என்னம்மா... வணக்கம்மா...

பெண் ஊழியர்: சார், குவார்ட்ரஸ் வாசல்ல பாம்பு வந்திருக்கு

அதிகாரி: ஏன் வந்துச்சு பாம்பு...

பெண் ஊழியர்: வாசல்ல வந்து அப்புறம் கிச்சன் சந்து வழியா உள்ளே புகுந்திடுச்சு

அதிகாரி: என்ன பாம்புமா... தேரை பாம்பா...

பெண் ஊழியர்: அது மேலே திட்டு திட்டா ரவுண்டா, ப்ரவுனா இருந்தது

அதிகாரி: எந்த பெரிய பாம்புமா... எங்க...

பெண் ஊழியர்: எங்கு இருக்குதுன்னு எனக்கு எப்படி தெரியும்.

அதிகாரி: ஏம்மா எப்ப பார்த்த அத...

பெண் ஊழியர்: இப்பதான் சார்.

அதிகாரி: உள்ளாற வந்து வெளியே போயிடுச்சுல்ல

பெண் ஊழியர்: இல்லை... இல்லை..

அதிகாரி: எப்படி அட்டை வச்சிருக்கும்போது பாம்பு உள்ளே வரும்

பெண் ஊழியர்: வீட்டுக்கு உள்ளே இல்லை சார்... குவார்ட்ரஸ் வாசல்ல வந்திருக்கு

அதிகாரி: அங்கெல்லாம் பாம்புதான் மேய்ந்துட்டுதான இருக்கு.. சரி சரி

பெண் ஊழியர்: சார் எப்பதான் டிரான்ஸ்பர் போடுவீங்க

அதிகாரி: போட்டுற்றேன்மா, பக்கத்துல்ல யாரும் இருக்காங்களா,.. ஏம்மா சோர்வா பேசுற....

பெண் ஊழியர்: அந்த பாம்ப பார்த்ததில் இருந்து ஒரே டென்ஷனாக இருக்கு சார்

அதிகாரி: அட நீ வேற... அட எவ்வளவு பாம்பு எல்லாம் என் காலில் ஏறி போயிருக்கு.. நீ பாம்பை பார்த்துட்டு அதே நினைச்சுட்டு இருக்கே.

பெண் ஊழியர்: சார் பாம்பை பார்த்தபிறகு எப்படி சும்மா இருக்க முடியுமா சார்.

அதிகாரி: நாம் வாழும்போது பல

பெண் ஊழியர்: இவ்வளவு மரம், செடி இருக்கு. இங்கே போய் லேடிசை போட்டு இருக்கிறீங்க. யாராவது ஜென்ஸ்ச போட்டிருந்தால்கூட தைரியமாக இருக்கலாம். ஜென்ஸ்சே பயப்படுவாங்க.

அதிகாரி: சரி சரி நான் அடுத்தவாரம் வர்றேம்மா

பெண் ஊழியர்: சார் வந்து பாம்பையா பிடிக்க போறீங்க

அதிகாரி: உன்னையும் பிடிச்சுடுறேன்... பாம்பையும் பிடிச்சுடுறேன்... இரு....

பெண் ஊழியர்: என்னை எல்லாம் பிடிக்க முடியாதுங்க சார், பாம்புக்கு பதில் சொல்லுங்க...

அதிகாரி: வர்றேம்மா. பிரியாயிட்டு பேசுறேன்... மீட்டிங்கிற்காக கிளம்பிட்டு இருக்கேன்... தைரியமா இரு...

பெண் ஊழியர்: நைட்டு எல்லாம் நான் தூங்கிறதே இல்லை இங்க.

அதிகாரி: ஒரு நிமிடம் இரு.. நீ பகல்ல, நைட்டு காவலுக்கு விட்டுட்டு இதுபண்ண சொல்றேன், நைட்டு பேசும்மா, தைரியமாக இரும்மா. நான் முடிவு பண்ணிட்டேன். உண்மையா தான் சொல்றேன். எவ்வளவு சீக்கிரமாக உன்னை டிரான்ஸ்பர் பண்ண முடியுமா செய்றேன். நான் செக்ரட்டரிகிட்ட மீட்டிங் போயிட்டு இருக்கிறேன். நைட்டு பேசும்மா... ஓகே...

ஓகே...

 இவ்வாறு அந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.

அரசு அதிகாரியே இதுபோன்ற பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டால் அரசு அலுவலகங்களுக்குள் பெண்கள் எப்படி  நுழைய முடியும் - மேகலாதேவி (புதுச்சேரி)

Related Stories: