கல்லாறு அரசு தோட்டக்கலைப்பண்ணையில் பலாப்பழம் சீசன் தொடக்கம் : வன விலங்குகளால் சுற்றுலா பயணிகள் அச்சம்

கல்லாறு: மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாறு அரசு தோட்டக்கலைப்பண்ணையில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. பலாப்பழ வாசனைக்கு காட்டு யானைகள் மற்றும் குரங்குகள் அதிக அளவில் படை எடுப்பதால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைத்துள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் சாலையில் இந்த தோட்டக்கலைப்பண்ணை அமைந்துள்ளது அரசு தோட்டக்கலைப்பண்ணை இயற்கை கொஞ்சி விளையாடும் அரசு பண்ணையில் கோடை காலத்தையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவியத்தொடங்கியுள்ளனர். அரிய வகை பழங்கள், வாசனை திரவிய பயிர்கள், அலங்காரச்செடிகள், செயற்கை நீர்விழ்ச்சி என சுற்றுலா பயணிகளின் மனம் கவர்ந்த பகுதியாக இந்த பண்ணை இருக்கிறது. தற்போது பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளதால் பலா மரங்களில் பழங்கள் கனிந்து தொங்குகின்றது. இதனால் அப்பகுதி முழுவதும் பலா வாசம் மணக்கிறது.

பலாப்பழ வாசனையில் ஈர்க்கப்படும் யானைகள், குரங்குகள் பண்ணைக்குள் புகுந்து  பலாப்பழங்களை உண்டு சேதப்படுத்துகின்றது இரவில் மட்டுமல்லாது பகல் நேரங்களிலும் யானைகளும், குரங்குகளும் படையெடுப்பதால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். வன விலங்குகள் குறித்து அச்சத்தை போக்க கண்காணிப்பு கேமராக்கள்,அபாய எச்சரிப்பு கருவிகள், பொறுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அது மட்டுமின்றி கோடை காலங்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவதால் பாதுகாப்பிற்காக வனத்துறை ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: