சென்னை: நடிகர் கமல்ஹாசன் அரசியலில் இருந்து காணாமல் போவார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் மத்திய அரசுக்கு முழு நெருக்கடி கொடுத்து வருகிறோம். அதிமுகவும், பாஜவும் கூட்டணி என்பது போன்று பத்திரிகையில் தன்னிச்சையாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு எதிராக யாருடனும் அதிமுக கூட்டணி வைக்கப்போவதில்லை.