தர்மபுரி: தர்மபுரி- திருப்பத்தூர் சாலை தூதராயன் கொட்டாய் அருகே நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் ஆங்கிலேயர் காலத்தில் தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை அமைக்கப்பட்டது. தொழு நோயாளிகள் படுக்கையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க தனிப்பிரிவு அங்கு இயங்கி வருகிறது. இங்கேயே மருத்துவர்கள், மருத்துவபணியாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை அளிக்க, 1972ம் ஆண்டு 30க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளது. தற்போது அந்த வீடுகளில் யாரும் தங்குவதில்லை. இதனால் பாழடைந்த கட்டிடமாக குடியிருப்புகள் மாறியுள்ளன. பாழடைந்து கிடக்கும் இந்த வீடுகளை சீரமைத்து தற்போதுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்ளுக்கு வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘தர்மபுரி அருகே மருத்துவத்துறை சார்ந்த அரசு குடியிருப்புகளில், யாரும் தங்காமல் பாழடைந்து கட்டிடங்கள் உள்ளன. கட்டிடங்களை சுற்றி முட்புதர் மண்டிகிடக்கிறது. இந்த குடியிருப்பை சீரமைத்து தற்போது பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்….
The post பாழடைந்து கிடக்கும் அரசு கட்டிடங்கள் appeared first on Dinakaran.