முதல்முறையாக போலீஸ் வேடத்தில் நடித்த ரகுல் பிரீத்

மும்பை: சிவகார்த்திகேயனுடன் ‘அயலான்’, கமல் ஹாசனுடன் ‘இந்தியன் 2’ ஆகிய படங்களில் நடிக்கும் ரகுல் பிரீத் சிங், தற்போது இந்தியில் நடித்துள்ள படம் ‘தேங்க் காட்’. இதில் அஜய் தேவ்கன், சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ளனர். இந்திரகுமார் இயக்கியுள்ளார். நாளை படம் வெளியாகிறது. இதில் போலீஸ் அதிகாரியாக நடித்த ரகுல் பிரீத் சிங் கூறுகையில், ‘முதல்முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன். இப்படியொரு கேரக்டரில் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்கு போலீஸ் கேரக்டருக்கேற்ற உயரம் இருந்தாலும், போலீசுக்குரிய மிடுக்கையும், வேகத்தையும் ஸ்கிரீனில் தர முடியுமா என்று சந்தேகம் ஏற்பட்டது. அந்த சந்தேகத்துக்கு விடையளிக்கும் விதமாக, என்னை சிறப்பாக நடிக்க வைத்துள்ளார் இந்திரகுமார். இனிமேல் நான் இதுபோன்ற கேரக்டர்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்’ என்றார். …

The post முதல்முறையாக போலீஸ் வேடத்தில் நடித்த ரகுல் பிரீத் appeared first on Dinakaran.

Related Stories: