அனுமதியில்லாத நிகழ்ச்சிக்கு வருகை பழநி அருகே எச்.ராஜா கைது

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி இடும்பன் குளத்தில் மகா ஆரத்தி சங்கமம் என்ற நிகழ்ச்சி நேற்று மாலை நடப்பதாக இருந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். எனினும் இதில் பங்கேற்க பாஜ தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா நேற்று மாலை காரில் வந்துகொண்டிருந்தார். சத்திரப்பட்டி பகுதியில் எஸ்பி சீனிவாசன் தலைமையிலான போலீசார் அவரது காரை நிறுத்தினர் திரும்பிச் செல்லும்படி கூறினர். அவர் மறுத்ததால் கைது செய்தனர். ஆனால், காரில் இருந்து இறங்க மறுத்து எச்.ராஜா போலீசாரை ‘‘பேரறிவாளன் பாலோவர்ஸ்’’ எனக்கூறி விமர்சித்தார். பின்னர் அவரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு வந்த பாஜவினர் மறியலில் ஈடுபட்டதால் அவர்களும் கைது செய்யப்பட்டனர்.  …

The post அனுமதியில்லாத நிகழ்ச்சிக்கு வருகை பழநி அருகே எச்.ராஜா கைது appeared first on Dinakaran.

Related Stories: