மும்பை குளிரில் நடுங்கிய தமன்னா

தமன்னா தற்போது தமிழில் சுந்தர்.சி இயக்கும் ‘புருஷன்’ என்ற படத்தில் விஷால் ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், இந்தியில் ‘விவான்’, ‘வி.ஷாந்தாராம்’, ‘ராகினி 3’, ரோஹித் ஷெட்டி இயக்கும் ஒரு படம், ஜெகன் சக்தி இயக்கத்தில் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார். அதனுடன் வெப் தொடர்களிலும் நடிக்கிறார்.

தென்னிந்திய படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்துகொண்ட தமன்னா தற்போது மும்பை லோகண்ட் வாலாவில் தனக்கு சொந்தமான அடுக்குமாடி சொகுசு பங்களாவில் வசித்து வருகிறார். இந்த வீட்டின் உள்புற வடிவமைப்புகள் பெரும்பாலும் அவரது தந்தையால் வடிவமைக்கப்பட்டவை என்றும், இதனால் இந்த இடம் தனக்கு இன்னும் சிறப்பானது என்றும் அவர் தெரிவித்திருந்தார். கடந்த சில தினங்களாக மும்பையில் கனமழை பெய்து வருகிறது.

இந்த மழையை தனது ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து மழையை ரசிப்பது போன்றும், மழையில் நனைந்தபடியும், குளிரில் நடுங்கியபடியும் உள்ள ஒரு மகிழ்ச்சியான வீடியோவை சோஷியல் மிடியாவில் தமன்னா பகிர்ந்துள்ளார். சிரித்தபடியும், நடனமாடியும் புத்துணர்ச்சியுடனும் மழை சீசனை அனுபவிக்கும் வீடியோவை பகிர்ந்த அவர், அதில் ‘எனக்கு இன்னும் குளிராக இருக்கிறது’ என்று கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

Related Stories: