ரிஷி ரித்விக் வெளியிட்ட யோகா இசை ஆல்பம்

சென்னை: தி ஆர்ட் ஆஃப் யோகா: 3335 யோகாசனா அண்ட் சாதனா என்ற இசை ஆல்பம் சென்னையில் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் நடிகர் ரிஷி ரித்விக் கலந்துகொண்டார். இந்த இசை ஆல்பம் தொடர்பான புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. பட்டிமன்ற பேச்சாளர் ராமலிங்கம், பேச்சாளர் மதுரை ராமகிஷ்ணன், அரசு அதிகாரிகள், நிறுவனத்தின் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள், சர்வதேச யோக ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் என பலர் கலந்துகொண்டனர். தன்வீர் தயானந்த் யோகி இந்நூலை எழுதியிருக்கிறார். பழங்கால ஆன்மீக ரகசியங்களையும், நடைமுறைப் பயிற்சிகளையும் இணைத்து, இதுவரை இல்லாத அளவில் 3,335 யோகாசனங்கள் மற்றும் சாதனா வழிமுறைகளை இந்த ஒரே நூலில் ஆவணப்படுத்தியுள்ளார்.

Related Stories: