
பாலிவுட் முன்னணி நடிகை ஷில்பா ஷெட்டி, தமிழில் ‘மிஸ்டர் ரோமியோ’, ‘குஷி’ ஆகிய படங்களில் நடித்தார். மற்ற மொழிகளில் அவர் நடித்த பல படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டுள்ளன. 51 வயதிலும் உடற்தகுதி மற்றும் அழகை பராமரித்து வரும் ஷில்பா ஷெட்டி கூறுகையில், ‘நடிகர்களைவிட நடிகைகள்தான் தங்களது உடல்நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்ல தூக்கம் மிகவும் முக்கியம். அளவான மற்றும் சத்தான உணவுப் பழக்கமும் அவசியம்.
இவ்விரண்டும் உடல்நலத்தின் அடித்தளமாகும். குடும்ப பொறுப்புகள் காரணமாக நிறைய பெண்கள் தங்கள் உடல்நலனை புறக்கணித்து விடுகின்றனர். ஆனால், முதலில் தங்கள் ஆரோக்கியத்தை பாதுகாப்பது மிகவும் அவசியம். தூக்கத்தை இழந்தால் உடல்நலம் மட்டுமின்றி, வாழ்க்கை இலக்குகளும் பாதிக்கப்படும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அதுபோல், பெண்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் குடும்பம் மகிழ்ச்சியாகவும், உறுதியாகவும் இருக்கும். எனவே, பெண்கள் தங்களின் உடல்நலனுக்கு அதிக முன்னுரிமை தரவேண்டும்’ என்றார்.

