
மும்பையை சேர்ந்த சாரா அர்ஜூனுக்கு இன்று 21 வயது முடிந்து 22வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். தனது 6 வயதிலேயே பல மொழிப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்திய அவர், ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலம் இளம் நடிகையாக ரசிகர்களுக்கு பரிச்சயமானார். இந்நிலையில், இந்தியில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த ‘துரந்தர்’ படத்தின் 2 பாகங்களின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான சாரா அர்ஜூன், பல ேகாடி ரூபாய் சம்பளம் வாங்கும் சில ஹீரோயின்களின் லிஸ்ட்டில் இணைந்துள்ளார்.
இந்நிலையில், அவர் தனது 9 வயதில் பேசியுள்ள ஒரு வீடியோ மீண்டும் சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது. அதில் அவர் கூறுகையில், ‘திரையுலகில் எனது ரோல் மாடல் யார் என்று கேட்கிறார்கள். பாலிவுட் நம்பர் ஒன் நடிகையான அலியா பட்டின் தோற்றமும், அவர் திரையில் தோன்றி நடிக்கும் ஸ்டைலும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை தொடர்ந்து எனக்கு தீபிகா படுகோனை மிகவும் பிடிக்கும்.
இவ்விருவரும் எனக்கு திரையுலகில் அதிக உத்வேகம் அளித்து வருகின்றனர். எனினும், நடிப்பு மற்றும் ஸ்டைலில் அவர்களை பின்பற்ற மாட்டேன். கடைசிவரை சாரா அர்ஜூனாக மட்டுமே இருக்க விரும்புகிறேன். எந்த நிலையிலும் யாருடைய நடிப்பையும் நான் காப்பிடியக்க மாட்டேன்’ என்றார்.

