×

3வது திருமணம்: நடிகரை கிண்டலடித்த நடிகைகள்

கடந்த 2001ல் இந்தியில் ஆமிர் கான் நடிப்பில் அசுதோஷ் கோவாரிகர் இயக்கத்தில் திரைக்கு வந்த ‘லகான்’ என்ற படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதற்காக சமீபத்தில் மும்பையில் நடந்த விழாவில் கஜோல், ஜூஹி சாவ்லா கலந்துகொண்டனர். இப்படத்தில் அவர்கள் நடிக்கவில்லை என்றாலும், 1997ல் அவர்கள் ஆமிர் கானுடன் இணைந்து நடித்த ‘இஷ்க்’ என்ற படத்தை தொடர்ந்து இன்றுவரை நட்பை தொடர்ந்து வருவதால் இவ்விழாவில் பங்கேற்றனர்.

அப்போது மேடையில் நின்றிருந்த ஆமிர் கானை, ‘உங்களுக்கு பெண்களை தேர்வு செய்வதில் எப்போதுமே நல்ல ரசனை இருக்கிறது’ என்று கிண்டலடிக்க, அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. ஏற்கனவே 2 காதல் திருமணங்கள் செய்து, அந்த மனைவிகளை அடுத்தடுத்து விவாகரத்து செய்துள்ள ஆமிர் கான், விரைவில் 3வது காதல் திருமணம் செய்ய ஆயத்தமாகி வருகிறார். அதை குறிப்பிட்டு கஜோல், ஜூஹி சாவ்லா இருவரும் மேடையில் பகிரங்கமாக ஆமிர் கானை கிண்டலடித்த சம்பவம் சுவாரஸ்யமாக இருந்ததாக, நெட்டிசன்கள் பலர் கமென்ட் வெளியிட்டுள்ளனர்.

Tags : Aamir Khan ,Asudosh Gowarikar ,Kajol ,Juhi Chawla ,Mumbai ,Aamir ,
× RELATED எத்தனை பேருடன்..? ரசிகரின் ஆபாச கேள்வி: நடிகை ஷாக் பதில்