×

நடிக்க வந்த அரசியல் குடும்ப வாரிசு

கிஷோர் குமார் இயக்கும் ‘ஹார்ட்டின்’ என்ற படத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன் ஆகியோருடன் இமயா நடித்துள்ளார். தமிழக முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் இமயா என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் திரைத்துறை சார்ந்த படிப்பை முடித்துள்ள இமயா, தமிழில் சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். தற்போது ‘ஹார்ட்டின்’ படத்தில் ஹீரோயின்களில் ஒருவராக நடித்துள்ளார். அவர் கூறுகையில், ‘நான் திரைத்துறைக்கு வருவதை ஆரம்பத்தில் விரும்பாத எனது குடும்பத்தினர், என்னை ேபாக வேண்டாம் என்று தடுத்தனர்.

ஆனால், நான் தீவிர முயற்சிகள் செய்து, எனது விருப்பத்தை தெரிவித்து இத்துறைக்கு வந்தேன். உடனே சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினேன். கதை விவாதங்களிலும் கலந்துகொண்டேன். ‘ஹார்ட்டின்’ படத்தில் மடோனா செபாஸ்டியனும், நானும் ஹீரோயின்களாக நடித்துள்ளோம். தற்போது நடிப்பில் மட்டுமே அதிக கவனம் ெசலுத்துகிறேன். விரைவில் படம் இயக்குவேன்.

அரசியல், சினிமா இரண்டுமே கடினமான துறைகள். அரசியல் பாரம்பரியம் கொண்ட எனது குடும்பத்தில் இருந்து நான்தான் முதலில் திரைத்துறைக்கு, அதுவும் நடிக்க வந்துள்ளேன். எப்போதும் போல் எனக்கு ரசிகர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.

Tags : Imaya ,Sanand ,Madonna Sebastian ,Kishore Kumar ,Finance Minister ,Thangam Tennarasu ,
× RELATED எத்தனை பேருடன்..? ரசிகரின் ஆபாச கேள்வி: நடிகை ஷாக் பதில்