×

சைக்கலாஜிகல் திரில்லர் டார்க்: ரியோ ராஜ் தகவல்

சென்னை: எம்.ஜி ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.பி.வி.மாறன், கணேஷ் கே.பாபு, பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் கே.செந்தில் தயாரிக்க, கல்யாண் கே.ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்தி நடித்துள்ள படம், ‘டார்க்’. முக்கிய வேடங்களில் அஞ்சனா நேத்ரன், கே.பாக்யராஜ், நட்டி நட்ராஜ், சிபி சக்ரவர்த்தி, விடிவி கணேஷ், அரவிந்த், சாகுல், நரேன் நடித்துள்ளனர். ‘டாடா’ கணேஷ் கே.பாபு கதை எழுத, ரவி சக்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். மனு ரமேசன் இசை அமைத்துள்ளார். இது சைக்கலாஜிகல் ஹாரர் திரில்லர் படம். யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார் பாடிய பாடலுக்கு தமன் இசை அமைத்துள்ளார். இப்பாடல் படத்தின் புரமோஷனுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இப்படத்தின் நிகழ்ச்சியில் நடிகரும், தயாரிப்பாளருமான ரியோ ராஜ் பேசுகையில், ‘சைக்கலாஜிகல் திரில்லர் படங்களுக்கு தனி ரசிகர்கள் இருப்பது போல், பேமிலி ஆடியன்சும் இருக்கின்றனர். பயந்து, பயந்து ஒரு படத்தை பார்ப்பது ஒரு குடும்பத்துக்கே பிடிக்கிறது. ஹாலிவுட்டின் அப்செஷன் படம் போல் தமிழில் ஒரு படம் வராதா என்ற ரசிகர்களின் ஏக்கத்தை தீர்த்து வைக்கும் வகையில் ‘டார்க்’ படம் இருக்கும்’ என்றார்.

Tags : Chennai ,A.P.V. Maran ,Ganesh K. Babu ,MG Studios ,K. Senthil ,Five Star Creations ,Ajay Karthi ,Kalyan K. Jagan ,Anjana Netran ,K. Bhagyaraj ,Natty Natraj ,Sibi Chakravarthy ,VTV Ganesh ,Aravind ,Sakul ,Naren ,Ravi Shakthi ,Manu Ramesan ,
× RELATED கூட்ட நெரிசலில் சிக்கிய ராஷ்மிகா பாதுகாத்து அழைத்து சென்ற கிரித்தி சனோன்