×

பிரபாசுக்கு என்ன ஆச்சு..? படப்பிடிப்புகள் நிறுத்தம்

ஐதராபாத்: பிரபாஸ் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. சில படப்பிடிப்புகளில் வேறொரு நடிகர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றனர். இதற்கெல்லாம் பிரபாசுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதே காரணமாக சொல்லப்படுகிறது. பிரபாஸ், இமான்வி நடிக்கும் ‘ஃபவுஜி’ படம் இந்த கோடை காலத்தில் ரிலீசாக வேண்டியது. இப்படம் அக்டோபருக்கு தள்ளிப்போகும் என சொல்லப்பட்டது. இப்போது விசாரித்தால், அடுத்த ஆண்டு துவக்கத்தில் கூட இந்த படம் வெளியாக வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

படத்தில் பிரபாஸ் நடிக்க வேண்டிய பல காட்சிகள் படமாக்கப்படவில்லையாம். ‘கல்கி 2’ படப்பிடிப்பிலும் பிரபாஸ் பங்கேற்கவில்லை. இதனால் அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் பிற நடிகர்கள் நடிக்கும் காட்சிகளை நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். ‘ஸ்பிரிட்’ என்ற படத்திலும் பிரபாஸ் நடிக்கிறார். இந்த படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. பிரபாசின் உடல் நிலையை பற்றி அவரது குடும்பத்தார் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் சீக்கிரமே அவர் குணமாகி படப்பிடிப்பில் பங்கேற்பார் என தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : Hyderabad ,Prabhas' ,Prabhas ,Imanvi ,Kalki ,
× RELATED கூட்ட நெரிசலில் சிக்கிய ராஷ்மிகா பாதுகாத்து அழைத்து சென்ற கிரித்தி சனோன்