சென்னை: ரவிமோகனின் மனைவி ஆர்த்தி பாடகி கெனிஷா மீது அவதூறு வழக்கு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், கெனிஷா சமூக வலைத்தளங்கள் உட்பட எந்த ஊடகத்திலும் ஆர்த்தி குறித்துப் பேசுவதற்குத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், கெனிஷா உருக்கமான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘என்னைப் பற்றி அவதூறு பேசும் உங்கள் யாருக்கும், என்னைப் பற்றி எதுவும் தெரியாது. நான், எனது இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்துவிட்டேன்.
என்னுடைய சிறுவயதிலேயே உறவினர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டேன். 19 வயதில் எனக்குத் திருமணம் ஆனது. எனது கணவர் என்னைக் கொடுமைப்படுத்தினார். அவர் என்னைத் தாக்கியதில் எனது வயிற்றில் இருந்த 4 மத குழந்தை கருவிலேயே கலைந்துவிட்டது. அப்போது, எனது அடிவயிற்றில் ரத்தம் வழிந்தது. நான் எனது வாழ்க்கையில் அப்பா, அம்மா மற்றும் குழந்தை என அனைவரையும் இழந்துவிட்டேன்.
இதிலிருந்து மீண்டு வருவதற்கே பல போராட்டங்களைச் சந்தித்தேன். அப்படியிருக்கும் போது நான் எப்படி இன்னொரு குடும்பத்தைக் கெடுக்க நினைப்பேன்? ரவி மோகன் ஒன்றும் குழந்தை இல்லை. அவரது வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும்? என்பதை முடிவெடுப்பவர் அவர் தான். அப்படி இருக்கும் போது இந்த விவகாரத்தில் என்னை ஏன் இழுக்கிறீர்கள்? சமூகத்தில் ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. அவற்றைப் பற்றிப் பேசுங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
