- சென்னை
- விஜி சினி புரொடக்ஷன்ஸ்
- நா. வெங்கடேசன்
- உன்னிகிருஷ்ணன்
- வைஷ்ணவி
- நிரீத்விகா
- ஸ்ரேயா
- எஸ்.ஆர். மணிகண்டன்
- சந்திரன் சாமி
- ராஜேந்திரன்
- நரேஷ்
- மதுரா தாக்குதல்
- மணிகண்டன்
சென்னை: வி.ஜி. சினி புரொடக்ஷன்ஸ் சார்பில் நா. வெங்கடேசன் தயாரிக்கும் திரைப்படம் ‘விசாரணை கைதி’. இதில் கதாநாயகனாக உன்னி கிருஷ்ணன், கதாநாயகியாக வைஷ்ணவி, நிரித்விகா, ஷ்ரேயா மற்றும் பலர் நடித்துள்ளனர் இந்த திரைப்படத்தை எஸ். ஆர். மணிகண்டன், கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார், ஒளிப்பதிவு – சந்திரன் சாமி. எடிட்டர் – ராஜேந்திரன். இசை அமைப்பாளர் – நரேஷ். ஸ்டன்ட் – அசால்ட் மதுர. ‘விசாரணை கைதி’ பட இயக்குனர் மணிகண்டன் கூறும்போது, ‘‘ஒரு சிறிய கிராமத்தில் தொடர்ந்து கொலைகள் நடந்து கொண்டு வருகிறது எதற்காக இப்படி எல்லாம் நடக்கிறது, இதன் பின்னணி என்ன?
மனிதனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத கொலைகள் எதற்காக நடக்கிறது என்பதை சஸ்பென்ஸ் திரில்லர் கதைகளமாக உருவாக்கி உள்ளேன். இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் திரை க்கு வர இருக் கிறது’’ என்றார்.
