×

வன்முறையையே பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்: ஊர்வசி ரவுடேலா

 

மும்பை: ஆக்‌ஷனுடன் கூடிய கிரைம் திரில்லர் கதை கொண்ட ‘இன்ஸ்பெக்டர் அவினாஷ்’ என்ற வெப்தொடரின் 2வது பாகத்தில், பூனம் மிஸ்ரா என்ற கேரக்டரில் நடித்துள்ளார் ஊர்வசி ரவுடேலா. உத்தரப்பிரதேசத்தின் சூப்பர் காப் அவினாஷ் மிஸ்ராவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவான இத்தொடரில், ரன்தீப் ஹூடா மனைவியாக ஊர்வசி ரவுடேலா நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கிரைம் தொடர்களில் மக்கள் பெரும்பாலும் வன்முறை, அதிகாரம் அல்லது ஆக்‌ஷனை மட்டுமே எதிர்பார்க்கின்றனர்.

ஆனால், அதற்கு அடியில் பயம், தனிமை மற்றும் தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும் தேவை இருக்கும். எனது கேரக்டர் அந்த உள்மனப் போராட்டத்தை மிகவும் ஆழமாக வெளிப்படுத்தும். சில நேரங்களில் வலிமை என்பது ஆக்ரோஷத்தில் இல்லை. எவ்வளவுதான் கஷ்டங்கள் வந்தாலும், அவற்றை அமைதியாக தாங்கிக்கொண்டு, தன்னை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதில்தான் இருக்கிறது. அதுவே என்னை இந்த கேரக்டரின் மீது ஒருவித ஈர்ப்பை கொண்டு வந்தது’ என்றார். கடந்த 2023ல் வெளியான இதன் முதல் பாகத்தை நீரஜ் பதக் இயக்கினார்.

Tags : Urvashi Rautela ,Mumbai ,Poonam Mishra ,Uttar Pradesh ,Avinash Mishra ,Randeep Hooda ,
× RELATED 29 விமர்சனம்