×

பல முன்னணி ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியவர்; வாலாட்டி பட இயக்குனருடன் ரவீணா ரவி காதல் திருமணம்

 

சென்னை: பிரபல டப்பிங் கலைஞரும், குணச்சித்திர நடிகை யுமான ஜா ரவியின் ஒரே மகள் ரவீணா ரவி. இவரும் ஒரு டப்பிங் கலைஞர்தான். முன்னணி ஹீரோயின்கள் சமந்தா, காஜல் அகர்வால், ரீத்து வர்மா, ராசி கன்னா, எமி ஜாக்சன், அமலா பால், திவ்யா உள்பட பலருக்கு டப்பிங் பேசியிருக்கிறார். அவரது தந்தை ரவி டப்பிங் கலைஞராக இருந்தபடி சில படங்களில் நடித்தார். ஆனால், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலமாகி விட்டார். தமிழில் `ஒரு கிடாயின் கருணை மனு’, `காவல்துறை உங்கள் நண்பன்’, `ராக்கி’, `லவ் டுடே’, `மாமன்னன்’ ஆகிய படங்களில் ரவீணா ரவி நடித்துள்ளார். இந்நிலையில், நேற்று அவர் திடீரென்று காதல் திருமணம் செய்துகொண்டார். இதுகுறித்து அவரது தாயார் ஜா ரவி, தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஒரு பதிவில் கூறியிருப்பதாவது: எனது மகள் ரவீணா ரவி, ‘வாலாட்டி’ படத்தின் இயக்குனர் தேவனுடன் இணைந்து, தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கி இருக்கும் இந்த நேரத்தில் உங்கள் ஆசிகளையும், பிரார்த்தனைகளையும் வேண்டுகிறேன்.

இந்த திருமணம் மிகவும் எளிமையாக, இரு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடந்தது. எனது கணவர் ரவி இல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடத்துவது என்பது, என்னை உணர்ச்சிப்பெருக்கில் ஆழ்த்தி இருக்கிறது. அனைத்தும் குறுகிய காலத்திற்குள் நடந்துவிட்டன. விரிவான ஏற்பாடுகள் எதையும் செய்வதற்கான மன வலிமையோ, உடல் வலிமையோ உண்மையில் என்னிடம் இல்லை. தேவன் மூலமாக பாசமான குடும்பத்தை அடைந்திருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஒரு தாயாக எனக்கு கிடைத்த மகிழ்ச்சி என்னவென்றால், ரவீணா தனது புதிய குடும்பத்தினரின் அன்பு மற்றும் ஆதரவுடன், தனது டப்பிங் மற்றும் நடிப்பு சார்ந்த பயணத்தை தொடர்வார் என்பதுதான். ரவீணாவும், தேவனும் இணைந்து தங்கள் அழகான வாழ்க்கை பயணத்தை தொடங்கும் வேளையில் அவர்களை மனதார ஆசீர்வதியுங்கள்.

 

Tags : Raveena Ravi ,Chennai ,Yumana ja Ravi ,Samantha ,Kajal Aggarwal ,Rithu Varma ,Raasi Khanna ,Amy Jackson ,Amala Paul ,Divya ,Ravi ,
× RELATED வன்முறையையே பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்: ஊர்வசி ரவுடேலா