பெங்களூரு: பிரேம் இயக்கத்தில் துருவா சர்ஜா, ரிஷ்மா நனய்யா நடித்துள்ள பான் இந்தியா படம், ‘கேடி: தி டெவில்’. இப்படத்தின் டிரைலர் கடந்த 22ம் தேதி வெளியானது. ஆனால், நேற்று முன்தினம் இரவு அப்படத்தின் டிரைலரை யூடியூபில் இருந்து கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நீக்கியுள்ளது. இந்நிறுவனம் தயாரித்துள்ள `ஜன நாயகன்’ என்ற படம், சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் இன்னும் திரைக்கு வரவில்லை. இதையடுத்து தயாரித்துள்ள ‘கேடி: தி டெவில்’ படத்துக்கும் சென்சார் சான்றிதழ் சம்பந்தப்பட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சமீபத்தில் யூடியூபில் வெளியிடப்பட்ட ‘கேடி: தி டெவில்’ படத்தின் டிரைலரில், கவனக்குறைவாக சில சான்றளிக்கப்படாத உள்ளடக்கங்கள் சேர்க்கப்பட்டு இருந்தன. எனவே, நாங்கள் அந்த டிரைலரை நீக்கிவிட்டோம்’ என தெரிவிக்கப்பட்டது.
