‘கேஜிஎஃப் 3’ குறித்து யஷ் தகவல்

 

யஷ் நடித்த ‘கேஜிஎஃப் 1’, ‘கேஜிஎஃப் 2’ ஆகிய பான் இந்தியா படங்கள் வெற்றிபெற்று, வசூலில் சாதனை படைத்து, இந்திய திரையுலகினரை கன்னட படவுலகை நோக்கி திரும்ப வைத்தது. எனவே, ‘கேஜிஎஃப் 3’ குறித்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர், இதுகுறித்து யஷ் கூறுகையில், ‘உண்மையை சொல்கிறேன், ‘கேஜிஎஃப் 3’ உருவாகும் வாய்ப்பு இல்லை.

‘டாக்ஸிக்’ என்ற பான்வேர்ல்ட் படத்தில் நடித்து முடித்துள்ள நான், அடுத்து ‘ராமாயணா’ என்ற பான் இந்தியா படத்தின் முதல் மற்றும் 2வது பாகத்தில் பிஸியாக இருக்கிறேன். எனினும், நேரம் கிடைக்கும்போது நானும், இயக்குனர் பிரஷாந்த் நீலும் பேசி வருகிறோம். பொருத்தமான கதை அமைந்தால், ‘கேஜிஎஃப் 3’ படத்தை உருவாக்குவது குறித்து யோசிப்போம்’ என்றார்.

Related Stories: