×

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ‘கேம் பிளே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !

கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ‘கேம் பிளே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘காளிதாஸ்’ படத்திற்குப் பிறகு இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை, ‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியின் சிவநேசன் இயக்குகிறார்.

பைனான்ஸியல் க்ரைமை மையமாகக் கொண்டு, எதிர்பாராத திருப்பங்களுடன் இன்வஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் இப்படம், புதிய கதை அமைப்புடன் வருவதாக கூறப்படுகிறது. “Exit is an Illusion” என்ற டேக் லைனுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக், கண்ணாடி சிதறல்களுடன் வடிவமைக்கப்பட்டு கவனம் ஈர்த்துள்ளது.

நடிகர்கள் கிஷோர், சாருகேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க, இசையை விஷால் சந்திரசேகர் அமைக்கிறார்.

படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Kartik Suppuraj ,Incredible Productions ,Sivanesan ,
× RELATED வெப்தொடரில் அறிமுகமாகும் சம்யுக்தா மேனன்