×

முனீஷ்காந்த் நடிக்கும் காக்கி சர்க்கஸ்

சென்னை: தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ள 7 எபிசோடுகள் கொண்ட வெப்தொடர், ‘காக்கி சர்க்கஸ்’. ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. ‘ஒன்ஸ் அஃபான் எ டைம் இன் காயம்குளம்’ என்ற பெயர் கொண்ட இத்தொடர், தற்போது ‘காக்கி சர்க்கஸ்’ என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. அமீன் பாரிஃப் எழுதி இயக்கியுள்ளார். ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட்டுக்காக ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார்.

முனீஷ்காந்த், சுபாஷ் செல்வம், ராஜேஷ் மாதவன், கவுதமி நாயர், வின்சு ரேச், சாவித்திரி, அம்ருதா, அப்துல் லீ, மருது பாண்டியன், ராகேஷ் உஷார், விக்னேஷ்வர், அருண்குமார் பவும்பா, சித்திரசேனன் நடித்துள்ளனர். இத்தொடர் குறித்து முனீஷ்காந்த் கூறுகையில், ‘இது எளிதில் கணிக்க முடியாத வேகத்தில் நகரும். காமெடிக்கும், பதற்றத்துக்கும் இடையிலான கேரக்டரில் நடித்துள்ளேன்.

நம் மண்ணின் வாசனையுடன் கூடிய இக்கதை, மிகவும் வேடிக்கையானதும் கூட. இதுபோன்ற கதைகளுக்கு ஜீ5 தளம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளித்துள்ளது’ என்றார். அமீன் பாரிஃப் கூறும்போது, ‘இக்கதையை அதன் தனிச்சிறப்புகளுடனும் சொல்ல எங்களுக்கு முழு சுதந்திரம் அளித்த ஜீ5 தளத்துக்கு நன்றி. ஒரு சப்-ஜெயிலை மையமாக வைத்து இத்தொடர் உருவாகியுள்ளது’ என்றார்.

Tags : Munishkanth ,Chennai ,Zee5 ,Amin Parif ,Srinidhi Sagar ,Rise East Entertainment ,Subhash Selvam ,Rajesh Madhavan ,Gauthami Nair ,Vince Rech ,
× RELATED சாத்தான் தி டார்க் விமர்சனம்