- மாதவன்
- சீக்கியர்கள்
- மும்பை
- ரன்வீர் சிங்
- தசம்
- குரு கோபிந்த் சிங்
- சிவசேனா
- ஷிண்டே
- மகாராஷ்டிராவில் உள்ள சீக்கியர்கள்
- குர்ஜோட்
மும்பை: மாதவன் மற்றும் ரன்வீர் சிங் நடித்த ஒரு குறிப்பிட்ட காட்சியில், சீக்கிய மதத்தவரின் பத்து குருக்களில் பத்தாவது குரு கோவிந்த் சிங் எழுதிய தசம் கிரந்தத்தின் வரிகளை மாதவன் சொல்வது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கிறது. அப்போது மாதவன் சிகரெட் பிடிப்பது போல் இருப்பதாவும் இதில், தங்களுக்கு அவமதிப்பு நிகழ்ந்துவிட்டதாக அந்த சமூகத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இந்தக் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவசேனா (ஷிண்டே பிரிவு) தலைவரும், ‘மகாராஷ்டிராவில் உள்ள சீக்கியர்கள்’ குழுவின் தலைவருமான குர்ஜோத் சிங் கீர், மும்பையின் முலுண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இந்தப் புகாரில் மாதவன், ரன்வீர் சிங் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆதித்யா தர் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு , அவர்கள் சீக்கியர் தியாகத்தை அவமதித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது பற்றி வீடியோ வெளியிட்டு மாதவன் பேசும்போது, ‘‘தசம் கிரந்தத்தின் வரிகள் எனக்குப் புனிதமானவை மற்றும் தூய்மையானவை. அந்த காட்சியில் நான் சிகரெட்டை முறையாக அணைத்துவிட்டேன், என் வாயிலிருந்து புகை வரவில்லை. மேலும் அந்தக் காட்சி முழுவதும் சிகரெட்டின் எந்தத் தடயமும் இல்லை.
நாங்கள் தெரிந்தோ தெரியாமலோ யாரையும் காயப்படுத்த விரும்ப மாட்டோம். நாங்கள் எப்போதும் முழு சீக்கிய சமூகத்திற்கு துணை நிற்போம். இந்த காட்சிக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் கூறப்படும் குற்றச்சாட்டை நாங்கள் நிச்சயமாகச் செய்யவில்லை’’ என்றார்.
