×

திரைத்துறையினருக்கு ஞாயிறு கட்டாய விடுமுறை: நிவின் பாலி கோரிக்கை

கொச்சி: இந்திய திரைத்துறையினருக்கு படப்பிடிப்புகளில் 8 மணி நேர வேலை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று, முன்னணி நடிகை தீபிகா படுகோன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அவரது கருத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் பன்மொழி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், மலையாள முன்னணி நடிகர் நிவின் பாலி, திரைத்துறையினருக்கு ஞாயிறு அன்று விடுமுறை என்பதை கட்டாயமாக்க வேண்டும் எனறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து நிவின் பாலி கூறுகையில், ‘திரைப்பட நடிகர், நடிகைகள் என்றாலும், தொழில்நுட்பக் கலைஞர்கள் என்றாலும், வாரத்தில் ஒருநாளாவது அவர்களும் தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க ஞாயிறு அன்று கட்டாய விடுமுறை அவசியம் வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய திரையுலகில் ஞாயிறு விடுமுறை நடைமுறையில் இருந்தாலும், பல படங்களுக்கு அந்த நாளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டால், தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அளிக்கப்படுகிறது. இதனால், நிவின் பாலியின் கோரிக்கையை தயாரிப்பாளர்கள் ஏற்பார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

Tags : Nivin Pauly ,Kochi ,Deepika Padukone ,
× RELATED சாத்தான் தி டார்க் விமர்சனம்