×

வெப்தொடரில் அறிமுகமாகும் சம்யுக்தா மேனன்

ஐதராபாத்: தனுஷ் ஜோடியாக தமிழில் ‘வாத்தி’, தெலுங்கில் ‘சார்’ ஆகிய படங்களில் நடித்த பிறகு பிரபலமானவர், சம்யுக்தா மேனன். மலையாள நடிகையான அவர், முன்னதாக தமிழில் ‘களரி’, ‘ஜூலை காற்றில்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். ெதாடர்ந்து இங்கு வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்நிலையில், முதல்முறையாக ‘குவ்வால செருவு காட்’ என்ற வெப்தொடரில் நடித்து வருகிறார்.

ஒரு கட்சிக்குள் நடக்கும் உட்பூசல்களை மையமாக வைத்து, அரசியல் பின்னணியில் இந்த வெப்சீரிஸ் தயாராகிறது. கிரண் அப்பாவரம் ஹீரோவாக நடித்துள்ளார். இதுகுறித்து சம்யுக்தா மேனன் கூறுகையில், ‘இதுவரை பார்க்காத ஒரு உலகமாக இது இருக்கிறது. இயக்குனர் மற்றும் கதாசிரியருடன் விவாதித்து, ஒவ்வொரு காட்சியையும் ரிகர்சல் செய்து நடித்தேன். இதுவரை நான் நடிக்காத கேரக்டர் என்பதோடு, முதல்முறையாக நான் வெப்சீரிஸில் நடிக்கும் அனுபவம் வித்தியாசமாக இருக்கிறது’ என்றார்.

Tags : Samyukta Menon ,Hyderabad ,Dhanush ,Dadardu ,
× RELATED சாத்தான் தி டார்க் விமர்சனம்