சென்னை: தென்னிந்திய மொழி படங்களை தொடர்ந்து இந்தி படங்களிலும் நடித்து வருபவர், வேதிகா. மும்பையை சேர்ந்த அவர், 2006ல் ‘மதராசி’ என்ற படத்தில் அர்ஜூன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து ராகவா லாரன்ஸ் ஜோடியாக ‘முனி’ என்ற படத்தில் நடித்தார். இதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, பல்வேறு மொழிகளில் வாய்ப்பு கிடைத்து ஏராளமான படங்களில் நடித்தார்.
திரையுலகில் 18 வருடங்களுக்கு மேலாக நடித்து வரும் அவர், சமீபத்தில் ஒரு படத்துக்காக கடுமையான காய்ச்சலுடன் பாடல் காட்சியில் நடனமாடியதாக சொன்னார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் நடித்த கேரக்டர்கள் அனைத்தும் அழுத்தமானவை. ‘சுல்தான்’ என்ற பாடல் சரியான நேரத்தில் என்னிடம் வந்தது.
ஷோபி மாஸ்டர் நடனப்பயிற்சி அளித்தார். இப்பாடலை நான் மிகவும் ரசித்து ஆடினேன். இதை படமாக்கும்போது எனக்கு 102 டிகிரி கடுமையான காய்ச்சல் இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் இருந்த உற்சாகம் என்னை சுறுசுறுப்பாக வைத்திருந்தது. அது கிளாமரான நடனம் மட்டுமல்ல, எனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் நடனமாகவும் உணர்ந்தேன்’ என்றார்.
