×

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது. லைகா புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ், இந்தியா டாக்கீஸ் இணைந்து தயாரிக்கின்றன. இது மெட்ராஸ் டாக்கீஸின் 23வது படமாகும். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து கடந்த ஆண்டு வெளியான `தக் லைஃப்’ படம் தோல்வி அடைந்தது. அதற்கு பிறகு புதுமுகங்களை வைத்து இயக்க திட்டமிட்ட மணிரத்னம், அந்த எண்ணத்தை திடீரென்று மாற்றிக்கொண்டார். சமீபத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடலுக்கான ஒலிப்பதிவு நடந்துள்ளது.

இந்த அறிவிப்பின் காரணமாக மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி பிரியவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ‘அமரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மணிரத்னம், ‘நான் சாய் பல்லவியின் ரசிகன். அவருடன் இணைந்து பணிபுரிவேன் என்று நம்புகிறேன்’ என்று சொல்லியிருந்தார். அது இப்போது நடந்துள்ளது. இதற்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச்சிவந்த வானம்’ என்ற படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

Tags : Vijay Sethupathi ,Chai Pallavi ,Manirathnam ,Sai Pallavi ,Laika Productions ,Madras Talkies ,India Talkies ,Kamal Hassan ,Maniratnam ,Vijay Sedupathi ,
× RELATED யோகி பாபுவின் அர்ஜுனன் பேர் பத்து டீசர் வெளியீடு