குழந்தைகள் போல ஸ்ரீரங்கம் கோயில் யானைகள் மழையில் உற்சாக குளியல்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

திருச்சி: ஸ்ரீரங்கம் கோயில் யானைகள் ஆண்டாள், லட்சுமி ஆகிய இரண்டு யானைகளும் குழந்தைகள் போல மழையில் நேற்று ஜாலியாக குளியல் போட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. திருச்சி ஸ்ரீரங்கத்தில் நேற்று காலை நல்ல மழை பெய்தது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான யானைகள் ஆண்டாள், லட்சுமி இரண்டும் இந்த மழையில் ஆனந்த குளியல் போடும் வீடியோ காட்சி நேற்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அக்காட்சியில் இரண்டு யானைகளும் குழந்தைகள் போல குதூகலத்துடன் மழையில் ஜாலியாக குளித்தன. தும்பிக்கையால் நீரை உறிஞ்சி ஒன்றன் மீது ஒன்று பீச்சியடித்து மகிழ்ச்சியாக இருந்தன. மழையென்றால் வழக்கமாக மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமான ஒன்று என்ற எண்ணம் தற்போதைய தலைமுறைகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் மழை சமமானது மகிழ்ச்சி தரக்கூடியது என்பதை இந்த வீடியோ காட்சி உணர்த்தியது. மேலும் யானைகளின் உற்சாகக்குளியல் வீடியோ மிகவும் ரசிக்கும்படி இருந்தது. கொரோனா ஊரடங்கால் வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகள் கோயில்கள் மூடியிருந்தன. இதனால் பாகன் உதவியுடன் கோயில் வளாகம் முழுவதும் சுற்றி வந்த யானைகள் மழையை அனுபவித்தபடி மகிழ்ந்திருந்தன. இந்த வீடியோவை பாகன் ஒருவர் எடுத்து வாட்ஸ்அப் ஒன்றில் வெளியிட, அது வைரலாக பரவியது. இதையடுத்து அந்த பாகனை பலரும் பாராட்டி வருகின்றனர். வழக்கமாக யானைகளை கொட்டடியில் போட்டு அடைத்தே வைத்திருக்காமல் இதுபோன்ற இயற்கை சீதோஷண நிலைகளையும் அனுபவிக்க அனுமதிக்க வைக்க வேண்டும். இதனால் யானைகளின் மன நிலையில் நல்லதொரு மாற்றம் ஏற்படும் என்கின்றனர் யானை ஆர்வலர்கள்….

The post குழந்தைகள் போல ஸ்ரீரங்கம் கோயில் யானைகள் மழையில் உற்சாக குளியல்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: