×

கொரியா காலநிலை மிகப்பெரிய சவாலாக இருந்தது: பிரியங்கா மோகன்

சென்னை: ‘நித்தம் ஒரு வானம்’ ரா.கார்த்திக் எழுதி இயக்க, ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, பிரியங்கா மோகன் நடித்துள்ள ‘மேட் இன் கொரியா’ என்ற படம், வரும் 12ம் தேதி முதல் நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பாகிறது. இப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரியங்கா மோகன் பேசியதாவது: படப்பிடிப்புக்கு முன்பு கொரியன் டிராமா பார்த்தேன், கொரியன் வார்த்தைகளை கற்றுக்கொண்டேன். கொரியாவில் ஒன்றரை மாதங்கள் படப்பிடிப்பு நடந்தது. அங்குள்ள கணிக்க முடியாத காலநிலை மிகப்பெரிய சவாலாக இருந்தது.

காலையில் செண்பாவாக சென்று, மாலையில் செண்பாவாக திரும்புவேன். ரா.கார்த்திக் மனைவி தீவிர கொரியன் டிராமா ரசிகை. அவரை இன்ஸ்பிரேஷனாக வைத்து இக்கதையை உருவாக்கினார். செண்பா தன்னை யார் என்று கண்டுபிடிப்பதே கதை. கொரியாவில் படமாக் கப்பட்ட முதல் தமிழ்ப் படம் இது. ஒரு கனவு இருந்தால், அதை அடைய கடுமையாக உழைத்தால், கண்டிப்பாக ஒருநாள் அது நிறைவேறியே தீரும் என்று சொல்லியிருக்கிறோம். 13 மொழிகளில் டப்பிங் செய்து, 36 மொழிகளில் சப்-டைட்டிலுடன் இப்படம் வெளியாகிறது.

* சோஷியல் மீடியாவில் தொடர்ந்து தாக்குதல்
தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் பிரியங்கா மோகன், பான் இந்தியா அளவில் முன்னேற முடியவில்லை. இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் தன்னை ட்ரோல் செய்து வருவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: திரையுலக முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் உள்பட அனைவரையும் ட்ரோல் செய்துவருகின்றனர்.

எனக்கு எதிராக திட்டமிட்டு நெகட்டிவ் விமர்சனங்கள் பரப்பி வருகின்றனர். இதிலிருந்து ஒரு விஷயத்தை தெரிந்துகொண்டேன். திரைத்துறை என்பது நிலையற்ற துறை. யாருக்கு எப்போது, என்ன நடக்கும் என்று சொல்லவே முடியாது. இதுபோன்ற விமர்சனங்கள் ஒருவரை தவறான பாதைக்குத்தான் அழைத்து செல்லும். சில நேரங்களில் அது நம்மை கடுமையாக கூட பாதிக்கலாம். எனவே, அதுபற்றி நினைத்து மனதளவில் நாம் பாதிக்கப்படக் கூடாது என்ற பாடத்தை கற்றுள்ளேன்.

Tags : Korea ,Priyanka Mohan ,Chennai ,Kartik ,Sriniti Sagar ,Rice East Entertainment ,Netflix ,
× RELATED காதல் ரீசெட் ரிப்பீட் விமர்சனம்