மதுரை ஆதீன பீடாதிபதியாக நான் பதவி ஏற்றுவிட்டேன்: மீண்டும் சர்ச்சையை கிளப்புகிறார் நித்தியானந்தா

மதுரை: இந்தியாவிலிருந்து தப்பியோடி, கைலாசா என்ற புதிய நாட்டை உருவாக்கியுள்ளேன் என்று கூறிவரும் நித்தியானந்தா, தற்போது மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்று விட்டேன் என்று சமூக வலைதளங்களில் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். மதுரை ஆதீனத்தின் 292வது பீடாதிபதியாக இருந்தவர் அருணகிரிநாதர் (77). உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 13ம் தேதி காலமானார். இவரது மறைவுக்குப் பிறகு ஆதீன மடத்தின் அன்றாடப் பூஜைகளை இளைய சன்னிதானம் சுந்தரமூர்த்தி தம்பிரான் மேற்கொண்டு வருகிறார். இவரை மதுரை ஆதீனமாக நியமிக்கும் விழா வரும் 23ம் தேதி மடத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்தியாவிலிருந்து தப்பி ஓடி, கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக பரபரப்பை ஏற்படுத்திய நித்தியானந்தா, தற்போது மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்று விட்டேன் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு, மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். நித்தியானந்தா தனது டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; மதுரை ஆதீன மடத்தின் 293வது பீடாதிபதியாக நான் பதவியேற்றுவிட்டேன். இனி ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு ஆசி வழங்க இருக்கிறேன். எனது பெயரை 293வது ‘‘ஜெகத்குரு மஹா சன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ பகவான் நித்தியானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என மாற்றிக் கொண்டுள்ளேன்’’ என தெரிவித்துள்ளார்.மதுரை ஆதீன மடத்தின் இளைய பீடாதிபதியாக நித்தியானந்தாவை, கடந்த 2012ம் ஆண்டு மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் அறிவித்தார். இது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து இந்த அறிவிப்பை அப்போதே அவர் திரும்ப பெற்றார். மேலும் ஏற்கனவே ஆதீன மடத்தில் நித்தியானந்தா நுழைய தடை விதித்து, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.  இந்நிலையில் மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்று விட்டதாக, நித்தியானந்தா அறிவித்து, மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்….

The post மதுரை ஆதீன பீடாதிபதியாக நான் பதவி ஏற்றுவிட்டேன்: மீண்டும் சர்ச்சையை கிளப்புகிறார் நித்தியானந்தா appeared first on Dinakaran.

Related Stories: