×

தென்னிந்திய சினிமாவில் ஆபாசமா? டாப்ஸிக்கு நடிகை ஜோதி பூர்வஜ் சரமாரி கேள்வி

ஐதராபாத்: சமீபத்தில் பேட்டி அளித்த டாப்ஸி, தென்னிந்திய சினிமாவில் நடிகைகளை ஆபாசமாக நடிக்க வற்புறுத்துகிறார்கள் என்றும் தன்னையும் அதுபோல் நடிக்க நிர்பந்தம் செய்தார்கள் என்றும் சொன்னார். தொடர்ந்து அவர் பேசும்போது, உள்ளாடையில் பேட் வைத்து நடிக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். அது எனக்கு அசவுகரியமாக இருந்தது. மேலும் எனக்கு அவமானமாகவும் இருந்தது’’ எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

கில்லர் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ஜோதி பூர்வஜ், பாலகிருஷ்ணா நடிக்கும் அகண்டா 2 படத்திலும் நடிக்கிறார். அவர் டாப்ஸிக்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ளார். அவர் கூறியது: டாப்ஸி தான்தோன்றியத்தனமாக பேசியிருக்கிறார். இந்தி சினிமாவில் இப்போது அவர் பிசியாக இருக்கலாம். ஆனால் அதற்கு முன் அவருக்கு வாழ்க்கை கொடுத்தது தென்னிந்திய சினிமாதான். சினிமா என்றாலே அது கிளாமர் உலகம்தான்.

அதில் நடிகைகளை கிளாமராக காட்டுவது ஒன்றும் புதிது கிடையாது. அப்படி இருக்கும்போது, இப்போது இந்தியில் முன்னணியில் இருக்கும்போது தென்னிந்திய சினிமாவை பற்றி டாப்சி இப்படி பேசியிருப்பது சரியானதல்ல. தென்னிந்திய படங்களில் அப்படியெல்லாம் நடிப்பது அவமானமாக இருந்தது என்றால், அப்போதே இந்த துறையை விட்டு போயிருக்கலாமே. ஏன் போகவில்லை? குறிப்பிட்ட படங்களில் நடிப்பதையும் தவிர்த்து இருக்கலாமே. இப்போது அதை பெரிதுபடுத்தி பேசுவது ஒருவித விளம்பர யுக்திதான். இவ்வாறு ஜோதி பூர்வஜ் கூறியுள்ளார்.

 

Tags : Jyoti Purvaj ,Taapsee ,Hyderabad ,Balakrishna ,
× RELATED 4த் ஃப்ளோர் விமர்சனம்…