11 பெண்களுக்கு பாலியல் தொல்லை நியூயார்க் ஆளுநர் பதவிக்கு ஆபத்து: பதவி விலக பைடன் வலியுறுத்தல்

நியூயார்க்:  அமெரிக்காவின் நியூயார்க் மாகாண ஆளுநர் ஆன்ட்ரூ கியூமோ. இவர் தனக்கு கீழ் பணியாற்றிய பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. 5 மாதம் நடந்த  விசாரணையின் முடிவில் 11 பெண்கள், ஆளுநர் தங்களை தவறான இடங்களில் தொட்டதாக வாக்குமூலம்  கொடுத்துள்ளனர். நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ஜோ பைடன், ‘ஆளுநர் ஆன்ட்ரூ பதவி விலக வேண்டும் என நான் நினைக்கிறேன்,’ என்றார். இதேபோல், நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி உள்ளிட்டோரும் இதே கருத்தை வலியுறுத்தி இருக்கின்றனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஆன்ட்ரூ, ‘என்னை பற்றி சித்தரிக்கப்பட்டு உள்ளதை விட உண்மைகள் வேறுபட்டவை. நான் யாரையும் தவறான நோக்கத்துடனோ, பாலியல் ரீதியாகவோ தொடவில்லை,’  என தெரிவித்துள்ளார்….

The post 11 பெண்களுக்கு பாலியல் தொல்லை நியூயார்க் ஆளுநர் பதவிக்கு ஆபத்து: பதவி விலக பைடன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: