ஹீரோவான பிறகு கதைகளை அதிக கவனத்துடன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், சூரி. நிவின் பாலி, அஞ்சலி நடிப்பில் ராம் எழுதி இயக்கியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள அவர், மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சூரி ஹீரோவாக நடிக்கும் 7வது படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இதை ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்.ரவிக்குமார் எழுதி இயக்குகிறார்.
இது கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தை மையப்படுத்தி உருவாகிறது. சூரி ஜோடியாக நடிக்க மமிதா பைஜுவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழில் விஜய்யுடன் ‘ஜன நாயகன்’, தனுஷுடன் ‘கர’, சூர்யாவுடன் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’, விஷ்ணு விஷாலுடன் ‘இரண்டு வானம்’ ஆகிய படங்களில் மமிதா பைஜு நடித்துள்ளார். இப்படங்கள் இந்த ஆண்டே அடுத்தடுத்து திரைக்கு வருகின்றன.
