‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள ‘வித் லவ்’ என்ற படத்தில் நடித்துள்ள அனஸ்வரா ராஜன் கூறுகையில், ‘தமிழ் மொழி எனக்கு மிகவும் பிடிக்கும். ‘வித் லவ்’ டீம் எனக்கு ஒரு குடும்பம் மாதிரி இருந்தது. டைரக்டர் மதன் சொன்ன கதையை கேட்ட பிறகு உற்சாகமாகி விட்டேன். மறுநாளே இதில் நடிக்க கால்ஷீட் கொடுத்தேன். கதையை கேட்டுவிட்டு ஒரேநாளில் நடிக்க நான் ஓ.கே சொன்ன படம் இது. அபிஷன் ஜீவிந்த் ஹீரோ என்றும், அவர் ஒரு ஆக்டிங் கோச் என்றும் சொன்னார்கள்.
அவர் தன்னுடைய கேர்ள் பிரெண்ட் அகிலாவுக்கு புரபோஸ் செய்த ஒரு வீடியோ அற்புதமாக இருந்தது. அதை ரசித்து பார்த்தேன். அபிஷன் ஜீவிந்துடன் நடித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. ஆரம்பத்தில் நடந்த ரிகர்சலில் அவருக்கும், எனக்கும் செட் ஆகவில்லை. ஷூட்டிங் தொடங்கிய பிறகுதான் செட் ஆனது. எனது நான்கு படங்களை பார்க்க வேண்டும் என்று சிபாரிசு செய்வதாக இருந்தால், மலையாளத்தில் வெளியான ‘சூப்பர் சரண்யா’, ‘தண்ணீர் மத்தன் தினங்கள்’, ‘நேரு’, ‘ரேகாசித்ரம்’ ஆகிய படங்களை சொல்வேன்.
எனது தந்தை ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். ரஜினி சாருக்காகவே நான் தமிழ் சினிமாவுக்கு வந்தேன். இப்போது அவரது மகள் சவுந்தர்யா தயாரிப்பில் நடித்துள்ளேன்’ என்றார்.
