சென்னை: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது: பிஎட் பட்டப் படிப்பு அரசு மற்றும் தனியார் பிஎட் கல்லூரிகள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரிகள் அதிக கட்டணத்தை வசூலிப்பதாக புகார்கள் வருகிறது. அதனால் மீண்டும் கல்வித்துறை அதுகுறித்து ஆலோசித்து ரூ.30 ஆயிரத்துக்கு மேல் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவும் பிறபிக்கப்பட்டுள்ளது. இதற்கு உட்பட்டு தனியார் கல்லூரிகள் செயல்பட வேண்டும். பிஎட் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பிற கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்கும் போது 75 சதவீதம் வசூலிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய புத்தகங்களில் உள்ள பிரச்னைகள் மாற்றி அமைக்கப்பட்டு புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து புத்தகத்திலும் ஒன்றிய அரசு என்று தான் இருக்கும் என்பது முதல்வர் எடுத்த முடிவு. தற்போது கொரோனா தொற்று முடிவுக்கு வராத நிலையில் அனைத்து சேர்க்கை நடவடிக்கைகளும் ஆன்லைன் மூலம் தான் நடக்கிறது. முடியாதவர்கள் நேரடியாகவும் விண்ணப்பங்கள் வழங்கவும் பல வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. போதிய அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது….
The post அமைச்சர் பொன்முடி பேட்டி பிஎட் பட்டப்படிப்பு ரூ.30 ஆயிரம் கட்டணம்: கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை appeared first on Dinakaran.