தமிழகம் சிறையில் முதல் வகுப்பு கேட்ட சிவசங்கர் பாபா மனு தள்ளுபடி : செங்கல்பட்டு நீதிமன்றம் அதிரடி Jul 27, 2021 சிவசங்கர் பாபா செங்கல்பட்டு சிவசாங்கர் பாபா சுஷில் ஹரி சர்வதேச பள்ளி முதல்வர் கேளம்பாக்கத்தில் சென்னை செங்கல்பட்டு: சென்னை அடுத்த கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் அளித்த பாலியல் புகாரின்பேரில், அவர் மீது 2 போக்சோ உள்ளிட்ட 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் இதில் தொடர்பு உடையவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா நீதிமன்றதில் ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர்கள் மூலம் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபா பள்ளியின் தாளாளராக இருந்தவர், அதனால் அவருக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க வேண்டும் என செங்கல்பட்டு கோர்ட்டில் அவரது வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி தமிழரசி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர், சிவசங்கர் பாபாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். … The post சிறையில் முதல் வகுப்பு கேட்ட சிவசங்கர் பாபா மனு தள்ளுபடி : செங்கல்பட்டு நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.
வெயிலின் தாக்கத்தால் மின்சார தேவை அதிகரித்துள்ள நிலையில் டான்ஜெட்கோ தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.. வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருப்போம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி!!
வெயிலின் தாக்கத்தால் மின்சார தேவை அதிகரித்துள்ள நிலையில் டான்ஜெட்கோ தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
வரி நிர்வாகத்தில் எளிய நடைமுறையின் பயனாக கூடுதலாக ரூ.40,399.51 கோடி வருவாய் வசூல் செய்யப்பட்டு சாதனை: தமிழ்நாடு அரசு தகவல்
சிவகாசியில் குழந்தையை கொன்று ஆசிரியர் தம்பதி உள்பட 4 பேர் தற்கொலை: ஆசிரியர் அளித்த வாக்குமூல வீடியோ வெளியானதால் பரபரப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் வணிகவரித்துறை முன்னணி வகிக்கிறது : தமிழ்நாடு அரசு பெருமிதம்
வெற்றியின் முகட்டில் நிக்கிறது இந்தியா கூட்டணி.. பாஜக உருவாக்கிய போலி பிம்பத்தை தகர்த்துவிட்டோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!!
திருவள்ளூர் காக்களூர் சிப்காட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4-ஆக உயர்வு