கோயில்களில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சிகளுக்கு தடை: கலெக்டர் அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு தற்போது குறைந்தபோதும், ஆடி மாதம் தொடங்கி உள்ளதால் அம்மன் மற்றும் முருகன் கோயிலில், வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் பக்தர்கள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால், 3வது அலை ஏற்பட வாய்ப்பாக அமைந்து விடும். எனவே தமிழக அரசு தெரிவித்துள்ளபடி, கோயிகளில் வழிபாடு செய்ய தடை ஏதும் இல்லை. ஆனால் கோயில்களில் திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்குகள் மேற்கொள்ள அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. கோயில்களில் அதிக கூட்டம் கூடாமல் தரிசனம் மட்டும் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் தவறுபவர்கள் மீது அபராதம் விதித்து வழக்குப்பதிவு செய்யப்படும். எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும்  உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது….

The post கோயில்களில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சிகளுக்கு தடை: கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: