உத்தரப் பிரதேசத்தின் ராம்பூரில் பிராணவாயு ஆலையைத் தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் ரேடிகோ கெய்தான் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள 6 மருத்துவப் பிராணவாயு ஆலைகளில் ராம்பூரின் பிலாஸ்பூரில் உள்ள சமூக மருத்துவ மையத்தில் ஒரு ஆலையை மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி தொடங்கி வைத்தார்.அப்போது பேசிய அவர், கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளினால் பிரதம மந்திரியின் குடிமக்களுக்கான உதவி மற்றும் நிவாரணத்தின் (பிஎம் கேர்ஸ்) மூலம் சுமார் 1500 மருத்துவப் பிராணவாயு ஆலைகள் நாடு முழுவதும் நிறுவப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.ஒரு மணி நேரத்தில் 20 கியூபிக் மீட்டர் மருத்துவப் பிராணவாயுவை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆறு ஆலைகள் ரேடிகோ கெய்தான் நிறுவனத்தால் பிலாஸ்பூர் (ராம்பூர்), பில்ஹார் (கான்பூர்), பக்வாந்த்பூர் (பிரயாக்ராஜ்), மஞ்ச்ஹன்பூர் (கௌசம்பி) மற்றும் மாணிக்பூர் (சித்ரகூட்) ஆகிய இடங்களில் உள்ள சமூக மருத்துவ மையங்களில் நிறுவப்பட்டு வருவதாக அவர் கூறினார். நிர்வாகத்தின் மேம்பட்ட வசதிகள் மற்றும் வளங்கள்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாட்டினால் பெருந்தொற்று இல்லாத நாட்டை உருவாக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்….

The post உத்தரப் பிரதேசத்தின் ராம்பூரில் பிராணவாயு ஆலையைத் தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி appeared first on Dinakaran.

Related Stories: