போஸ்டரை கிழித்ததால் ஸ்வேதா மேனன் கோபம்

சென்னை: தனது பட போஸ்டரை கிழித்ததால் நடிகை ஸ்வேதா மேனன் கோபம் அடைந்தார். மலையாளத்தில் பல படங்களில் நடித்த ஸ்வேதா மேனன், தமிழிலும் நடித்திருக்கிறார். இப்போது பள்ளிமணி என்ற மலையாள படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் போஸ்டர் கேரளாவில் பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்தது. இதில் சில இடங்களில் போஸ்டரில் இருந்த ஸ்வேதா மேனனின் முகம் பகுதி மட்டும் கிழிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஸ்வேதா மேனன், விஷமத்தனமான வேலையாக இது இருக்கிறது. என்னை புறந்தள்ள பார்க்கிறார்கள். இது யார் செய்திருந்தாலும் அது கோழைத்தனமான செயலாகவே பார்க்கிறேன். துணிச்சல் இருந்தால், எனக்கு முன்னால் வந்து இப்படி செய்யட்டும். அதற்கு அவர்களிடம் தைரியம் இருக்காது. அதனால்தான் அவர்களை கோழைகள் என்கிறேன். இந்த படம், அறிமுக இயக்குனரின், புதிய தயாரிப்பாளரின் கனவு. அதைதான் சிலர் சிதைக்க பார்க்கிறார்கள்’ என்றார்.

Related Stories: