தமிழகத்தில் நீட் தேர்வு நடக்குமா?: கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் இன்று ஆலோசனை

சென்னை: சென்னை, எழிலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசித்தோம். ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகள் இன்னும் திறக்கவில்லை. புதுச்சேரியிலும் தற்போது பள்ளிகள் திறப்பது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டம் இன்று நடக்கிறது. அந்த கூட்டத்தில் பள்ளிகள் திறப்பது, நீட் தேர்வு நடத்துவது குறித்தும் ஆலோசிக்க இருக்கிறோம். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் முறையாக நடத்தப்படுகிறதா என்றும் ஆய்வு செய்ய இருக்கிறோம். 
அப்போது நீட் பயிற்சி வழங்குவது குறித்தும் முடிவு எடுக்கப்படும். ஏற்கெனவே இந்த பயிற்சி ஆன்லைன் மூலம் அளிக்கபடுகிறது. தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்பது எங்கள் கருத்தாக உள்ளது. ஆனால் எதிர்பாராத விதமாக ஒன்றிய அரசு நீட் தேர்வை அறிவித்துள்ளது. இது வருத்தம் அளிப்பதாக  இருக்கிறது என்று முதல்வர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார். பிளஸ் 2 முடிவுகள் ரெடி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மேலும் கூறுகையில், தமிழகத்தில் பிளஸ்- 2, வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் தயார் நிலையில் இருக்கிறது. தேர்வு  முடிவுகள்  வெளியிடுவது குறித்து முதல்வருடன் ஆலோசித்தோம். அவர் அனுமதி அளித்த பிறகு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றார்.

The post தமிழகத்தில் நீட் தேர்வு நடக்குமா?: கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் இன்று ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: