வாரிசு படத்தை வெளியிட சிக்கல் தீர்ந்தது

சென்னை: வாரிசு படத்தை ஆந்திரா, தெலங்கானாவில் வெளியிட ஏற்பட்ட சிக்கல் தற்போது தீர்ந்துள்ளது. விஜய், ராஷ்மிகா நடித்துள்ள வாரிசு படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ளார். தில் ராஜு தயாரித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. அதே நாளில் சிரஞ்சீவி நடித்துள்ள வால்டேர் வீரய்யா, பாலகிருஷ்ணா நடித்துள்ள வீர சிம்ம ரெட்டி படங்களும் திரைக்கு வருகின்றன. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா படங்களுக்குதான் அதிக தியேட்டர்கள் ஒதுக்க வேண்டும்.

வாரிசு படம் 2 மொழி படம் என்பதால், அதற்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்க முடியாது என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்தது. இதற்கு பட தயாரிப்பாளர் தில் ராஜு எதிர்ப்பு தெரிவித்தார்.  இந்நிலையில் இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்துடன் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. வாரிசு படத்தை ஆந்திரா, தெலங்கானாவில் திட்டமிட்டபடி திரையிட அனுமதி தரப்படும். தியேட்டர்களும் ஒதுக்கப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: