ராதே ஷ்யாம் தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட பிரபாஸ் ரசிகர்

பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷியாம் படம் சமீபத்தில் வெளியானது. பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியானது. கலவையான விமர்சனங்களுடன் வெளியாகியுள்ள இப்படம், ஆந்திரா, தெலுங்கானா தவிர பிற மொழிகளி் வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்காத நிலையில் பிரபாஸ் ரசிகர் ஒருவர் தற்கொலை கொண்டுள்ளார். ஆந்திராவின் கர்னூலைச் சேர்ந்த முத்யாலா ரவி தேஜா (வயது24) வெல்டிங் தொழிலாளியான பிரபாசின் தீவிர ரசிகராம்.

ராதே ஷியாம் படம் பார்த்தவருக்கு படம் பிடிக்கவில்லை, படத்திற்கு கிடைத்த வரவேற்பும் அவருக்கு ஏமாற்றமாக இருந்திருக்கிறது. இது குறித்து தனது தாயிடமும், நண்பரிடமும் வருத்தம் தெரிவித்து கவலையாக இருந்துள்ளார். இதையடுத்து தான் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பிரபாஸ் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: