தர்ஷாவின் டான்ஸ் வீடியோ

சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்தவர் தர்ஷா குப்தா. சமூக வலைத்தளத்தில் அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இந்தி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு தர்ஷா குப்தா, டான்ஸ் ஆடியிருக்கிறார். அதை அவர் வீடியோவாக உருவாக்கி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இதில் கவர்ச்சியாக டான்ஸ் ஆடியிருக்கிறார் தர்ஷா குப்தா. இதை பார்த்த நெட்டிசன்கள், ஜொள்ளு விடாதக் குறையாக அவரை புகழ்ந்து வருகின்றனர்.

அத்துடன் லைக்குகளும் அள்ளியிருக்கிறது இந்த வீடியோ. இது பற்றி தர்ஷா கூறும்போது, ‘இந்த பாடலுக்கான நடனத்தில் எனது அசைவுகள் திருப்தியாக வரவில்லை. நான் இன்னும் நன்றாக ஆடியிருக்கலாம். நான் டான்ஸர் கிடையாது. ஆனாலும் முயற்சி செய்திருக்கிறேன். ரசிகர்கள் எனது நடனத்தை பொறுத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு இந்த நடனம் பிடிக்கும் என நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: