காதலருக்கு இசை பயிற்சி தரும் ஸ்ருதி

லண்டனை சேர்ந்த மைக்கேல் கர்சேல் என்பவரை காதலித்து வந்த ஸ்ருதிஹாசன், சில வருடத்துக்கு முன் அவரை பிரிந்துவிட்டார். இந்நிலையில் டெல்லியை சேர்ந்த சாந்தனு என்பவரை தற்போது காதலித்து வருகிறார். இவர் டாட்டூ கலைஞர். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களையும் வீடியோவையும் ஸ்ருதி பகிர்ந்து வருகிறார். இதை பார்த்த நெட்டிசன் ஒருவர், உங்கள் காதல் வாழ்க்கை எப்படி போகிறது? என ஸ்ருதியிடம் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்திருக்கிறார் ஸ்ருதி. ‘மைக்கேலை பிரிந்த பிறகு சில காலம் சிங்கிளாகவே இருந்தேன். சாந்தனுவை பார்த்த பிறகு நண்பர்கள் ஆனோம். பிறகு அதுவே காதலானது. இப்போது நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்.

எப்போதும் நான் காதலை மறைத்ததில்லை. அந்த வகையில் எனது ரசிகர்களிடம் நான் வெளிப்படையாக இருக்கிறேன். காதலை மறைக்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை. வாழ்க்கையில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும்போது, என் மீது அன்பு செலுத்தும் ரசிகர்களுக்கு அதை தெரியப்படுத்துவது நியாயம்தானே’ என்கிறார் ஸ்ருதி. டாட்டூ கலைஞரான சாந்தனு இசையிலும் ஆர்வம் கொண்டவர். டிரம்ஸ் வாசிப்பாராம். இப்போது அவருக்கு கீபோர்ட் வாசிக்க ஸ்ருதி பயிற்சி அளித்து வருகிறாராம்.

Related Stories: