×

துல்கரிடம் மன்னிப்பு கேட்ட பாக்யஸ்ரீ

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் வெளியான படம் ‘காந்தா’. இப்படத்தின் ஒரு காட்சியில், சினிமா படப்பிடிப்பில் துல்கர் சல்மான் கன்னத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் அடிப்பது போன்ற காட்சி படமாக்கப்படும். ஹீரோயின் உண்மையிலேயே கன்னத்தில் அடிப்பதை எதிர்பார்க்காத துல்கர் சல்மான், தனது நடிப்பை மேலோங்கி காண்பித்து காட்சியை தன்வசப்படுத்த, ஹீரோயினின் கையை பிடித்து தனது கன்னங்களில் மாறி மாறி அடித்துக்கொள்வார். ஒரு உச்ச நடிகர், ஒரு காட்சியை எப்படி தன்வசப்படுத்துகிறார் என்பதை காட்டுவதாக இக்காட்சி அமைந்திருக்கும்.

இதுகுறித்து பாக்யஸ்ரீ போர்ஸ் கூறுகையில், ‘அக்காட்சியில் உண்மையிலேயே துல்கரின் கன்னத்தில் நான் அடித்துவிட்டேன். முதலில் அக்காட்சியை பேப்பரில் படித்துவிட்டு, ‘கன்னத்தில் அடிப்பதை போலியாக செய்யலாமா?’ என்று கேட்டேன். ஆனால் துல்கர், ‘நீங்கள் நிஜமாகவே கன்னத்தில் அறைந்தால்தான், முகத்தில் உண்மையான உணர்ச்சி தெரியும். அப்போதுதான் காட்சி சிறப்பாக வரும்’ என்று சொல்லி, என்னை உண்மையிலேயே அடிக்க சொன்னார். நானும் நீண்ட நேரம் முயற்சித்து, ஒருவழியாக துல்கரின் கன்னத்தில் பலமாக அறைந்தேன். அவருக்கு வலித்ததை வெளியே காண்பித்துக் கொள்ளவில்லை. உடனே நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன்’ என்றார்.

Tags : Baqyasree ,Dulgar ,Dulgar Salman ,Rana Tagupati ,Samudrakani ,Bakhyasri Porz ,Selvamani Selvaraj ,Thulkar Salman ,
× RELATED ரிஜிஸ்டர் ஆபீசில் திருமணம் செய்துகொள்வேன்: ஸ்ருதி ஹாசன் அதிரடி