×

உளவியல் திரில்லரில் ஸ்மிருதி வெங்கட்

மர்மங்கள் நிறைந்த உளவியல் திரில்லர் கதை கொண்ட ‘ஸ்டீபன்’, வரும் டிசம்பர் 5ம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது. மிதுன் பாலாஜி எழுதி இயக்கியுள்ளார். கோமதி சங்கர், ஸ்மிருதி வெங்கட், மைக்கேல் தங்கதுரை நடித்துள்ளனர். இதுகுறித்து மிதுன் பாலாஜி கூறுகையில், ‘அமைதியான கால்குலேட்டட் சீரியல் கில்லர் பற்றிய கதைதான் ‘ஸ்டீபன்’. பல தனிப்பட்ட ரகசியங்களை தனக்குள் சுமந்து செல்லும் கேரக்டரில் கோமதி சங்கர் நடித்துள்ளார்.

இக்கதையின் மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். அதிக கவனத்துடனும், நேர்மையுடனும் படமாக்கியுள்ளோம். இக்கதையை 190க்கும் மேற்பட்ட நாடுகளில், பல்வேறு மொழிகளில் ரசிகர்கள் பார்க்கலாம். அனைவருக்கும் ‘ஸ்டீபன்’ கதை மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன்’ என்றார். ஜேஎம் புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் ஜெயகுமார், மோகன் தயாரித்துள்ளனர். மிதுன் பாலாஜி, கோமதி சங்கர் எழுதியுள்ளனர்.

Tags : Smriti Venkat ,Netflix ,Mithun Balaji ,Gomathi Shankar ,Michael Thangadurai ,
× RELATED ரிஜிஸ்டர் ஆபீசில் திருமணம் செய்துகொள்வேன்: ஸ்ருதி ஹாசன் அதிரடி