×

கவர்ச்சியாக நடி! மகளுக்கு அம்மா நடிகை அட்வைஸ்

கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர் மலையாள நடிகை ஆஷா சரத். அனுஷ்கா நடித்த பாக்மதி படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார். இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் உத்ரா படிப்பை முடித்துவிட்டார். அவரை மாடலிங் துறையில் விட்டிருக்கிறார் ஆஷா. சமீபத்தில் நடந்த அழகி போட்டி ஒன்றில் உத்ரா ரன்னராக வந்துள்ளார். இதனால் ஆஷா சரத் மகிழ்ச்சியில் இருக்கிறார். கூடிய சீக்கிரம் மகளை நடிகையாக்கி பார்க்க வேண்டும் என அவர் முடிவு செய்திருக்கிறார்.

தனது சமூக வலைத்தள பக்கங்களில் ஹோம்லி லுக்குடன் உத்ரா தோன்றி வந்துள்ளார். இனி கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி, அதுபோன்ற புகைப்படங்களை பதிவு செய்ய ஆஷா உத்தரவிட்டுள்ளாராம். அப்போதுதான் கிளாமர் வேடங்கள் கிடைக்கும். கமர்ஷியல் படங்களில் நடித்து பிரபலம் ஆகலாம் என உத்ராவுக்கு ஆஷா அறிவுரை கூறியுள்ளாராம். தற்போது ஆஷா சரத், மம்மூட்டியுடன் சிபிஐ 5 மலையாள படத்தில் நடித்து வருகிறார். மம்மூட்டி உள்பட சில நடிகர்களிடம் மகளின் வாய்ப்புக்காக ஆஷா கோரிக்கை விடுத்துள்ளாராம்.

Tags :
× RELATED சுவிட்சர்லாந்தில் சமந்தா