மீண்டும் நடிக்க வந்த அமீர்

யோகி படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் அமீர். அதன் பிறகு நாற்காலி என்ற படத்தில் நடித்தார். படம் இன்னமும் ரிலீசாகவில்லை. அவர் நடித்த வடசென்னை படம் வெளியாகி வெற்றி பெற்றது. அவரது நடிப்பும் பேசப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நடிக்க வந்துள்ளார் அமீர். இந்த படத்துக்கு இன்னும் தலைப்பு சூட்டவில்லை. பகைவன், அதர்மம் படங்களை இயக்கிய ரமேஷ் கிருஷ்ணன் இந்த படத்தை இயக்குகிறார். அமீரின் அமீர் பிலிம் கார்ப்பரேஷன், ஜேஎஸ்எம் பிக்சர்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் அமீர் ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். ஆர்யாவின் தம்பி சத்யா, வின்சென்ட் அசோகன் உள்பட பலர் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Related Stories:

More