மாநகரம் இந்தி ரீமேக் நிறைவடைந்தது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஸ்ரீ, சந்தீப் கிஷன், முனிஷ்காந்த் நடித்த படம் மாநகரம். தற்போது இப்படத்தை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். இப்படத்துக்கு ‘மும்பைகர்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் விக்ராந்த் மாஸ்ஸே, ஹிர்து ஹாரூன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முனிஷ்காந்த் நடித்த கேரக்டரில்  விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த படத்தின் பணிகள் நிறைவடைந்திருக்கிறது.ஜனவரி மாதம் வெளிவரும் என்று தெரிகிறது. இதில் விஜய்சேதுபதி தமிழ் இளைஞராகவே நடித்துள்ளார்.

Related Stories: