தி மேட்ரிக்ஸ் 4ம் பாகத்தில் பிரியங்கா சோப்ரா

தமிழில் அறிமுகமாகி, பாலிவுட்டில் வளர்ந்து இப்போது ஹாலிவுட்டில் இருப்பவர் பிரியங்கா சோப்ரா. குவாண்டிகோ என்ற வெப் தொடரில் நடிக்க சென்றவர் பே வாட்ச் படத்தின் மூலம் பாலிவுட் நடிகை ஆகிவிட்டார். அவ்வப்போது இந்தி படத்தில் நடித்தாலும் ஹாலிவுட்டில் நிரந்தரமாக குடியேறி விட்டார். அவரது அடுத்த ஹாலிவுட் படமான தி மேட்ரிக்ஸ் 4ம் பாகம் டிசம்பர் 22ம் தேதி வெளிவருகிறது.

படத்தில் பிரியங்கா சோப்ராவின் தோற்றம் என்ன என்பதை தற்போது வெளியிட்டிருக்கிறார்கள். பே வாட்ச் படத்தில் கவர்ச்சி வில்லியாக நடித்திருந்த பிரியங்கா சோப்ரா இதில் ஹீரோவுக்கு உதவும் பெண்ணாக நடித்திருக்கிறாராம்.

Related Stories:

More